Saturday, February 27, 2010

வெட்கத்தில் மனசு!


"
கூட்டத்தில்
என்
கை பிடித்தபடி
நடை பழகுகிறாய்!

வெட்கத்தில்
ஓரமாய்
தள்ளி நின்று கொண்டது
மனசு!"

வழிகாட்டி!


"
என்
வழி தெரியா
பயணத்தில்...

உன் நினைவுகள்
என்
வழிகாட்டி!"

கவன ஈர்ப்பு தீர்மானங்கள் : 1

கவன ஈர்ப்பு தீர்மானங்கள் - 2

கவன ஈர்ப்பு தீர்மானங்கள்-3

Friday, February 26, 2010

தேவதை


"
ஒரு
பனிப்பொழிவில்

இரு கைகளை
சிறகாய் விரித்து
சிரித்தாயே!

அன்று தான்,

பூமியில்
தேவதைகள் உலவுவதை
உணர்ந்தேன்!
"

காதலி


"
நான்
பொய் சொல்லும்போதெல்லாம்
வெட்கப்படுகிறாயே!

அடியே!

உண்மையில்
நீ காதலி தான்!"